சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வந்தார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட அவர் அதிமுகவில் மீண்டும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இனி அரசியலில் நுழைய மாட்டார் என நினைத்த நிலையில் தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், கட்சியை சரிசெய்துவிடலாம் சீக்கிரம் வந்து விடுவேன். நீங்கள் கவலைப்படாமல் இருங்கள். நான் நிச்சயம் வருவேன். இப்போது கொரோனா தொற்று மோசமாக இருப்பதால் கவனமுடன் இருங்கள் என்று தொண்டருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.