Categories
உலக செய்திகள்

ஆஹா! தடுப்பூசி போட்டால்….10 கோடி மதிப்புள்ள வீடு பரிசு…. எங்கு தெரியுமா…??

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர்.

இந்நிலையில் ஹாங்காங்கில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டும் குடிமக்களை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு லாட்டரி மூலம் 1.4 மில்லியன் (10.13 கோடி) மதிப்புள்ள 449 சதுர குடியிருப்பு பரிசாக வழங்கப்படும் என்று ஹாங்காங் டெவலப்பர் நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |