Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvIND தொடர் : முதல் நாள்….. இந்தியா திணறல்…!!!

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா  203/6 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் களம் இறங்கினர். 5ஆவது ஓவரில் ரோச் வீசிய பந்தில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டம் இழந்தார் மயங்க் அகர்வால். அதன்பின் களமிறங்கிய புஜாரா வந்த வேகத்தில் 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

Image result for rahane in test

கேப்டன் கோலியும்  9 ரன்களில் காப்ரியல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரஹானேவும், லோகேஷ் ராகுலும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதன் பின் ரஹானே 81 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 44 ரன்களுடனும்  ஆட்டம் இழந்தனர். விஹாரி 32 ரன்களுடன் ஆட்டமிழக்க  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பபண்டும் 20 ரன்களுக்கு  ஜடேஜாவும் 3 ரன்களுக்கு களத்தில் உள்ளனர்.

Categories

Tech |