இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். மே 31ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிய உள்ள நிலையில், ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை பகல் 12 மணிவரை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள அனுமதி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.