Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. TNPSC அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஜூன் 8 முதல் ஜூன் 11 வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை 2, தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணிகள் 2013 – 2018 பணிக்கான நேர்முகத் தேர்வு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான நேர்முகத் தேர்வின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மே 29, 2019 இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், 2008 முதல் 2019 உதவி மின் ஆய்வாளர் 2, உதவி பொறியாளர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |