தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் வீதிகளில் நாய், பூனை மற்றும் குதிரை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் வீதிகளில் இருக்கும் நாய், பூனை மற்றும் குதிரைகளுக்கு 3 லட்சம் மதிப்பிலான உணவு கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது. விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் மூலம் இவை விலங்குகளுக்கு தரப்படும். மேலும் அவைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளும் மருத்துவ பணிகள் துறை மூலம் வழங்கப்படும் என கால்நடை துறை கூறியுள்ளது.
Categories