இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், அவரது நீண்ட நாள் காதலி கேரி சைமன்ட்ஸுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது. கடைசி நிமிடத்தில் நெருங்கிய விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், போரிஸ் ஜான்சனின் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரிகளுக்குக் கூட விஷயம் முன்கூட்டியே தெரியாது என்றும் அந்நாட்டு செய்தித் தாள்களும் ஊடகங்களும் தகவல் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் 30 பேருக்கு மட்டுமே திருமண நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Categories