Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்னும் அதை கொடுக்கல… போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு மண்டலம் 91-வது வார்டில் மணிகண்டன் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 27ஆம் தேதி மணிகண்டன் உடல்நலக் குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மணிகண்டனின் குடும்பத்தினருக்கு ஈமசடங்கு தொகையான 25 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.

இதனால் 91 மற்றும் 92-வது வார்டுகளில் பணிபுரியும் பணியாளர்கள் 91-வது வார்டு அலுவலகம் முன்பு வேலைகளை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தூய்மை பணியாளரின் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |