Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு…. ஐலோஸ்டாட் தரவுத்தளம் தகவல்….!!!!

இந்தியா முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.11 சதவீதமாக உயர்ந்தது. இதனைப் போலவே வங்கதேசத்தில் வேலையின்மை விகிதம் 5.3% ஆகவும், இலங்கையில் 4.48% ஆகவும், பாகிஸ்தானில் 4.65% ஆகவும், நேபாளத்தில் 4.44% மற்றும் பூட்டானில் 3.74% ஆகவும் இருந்தது என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஐலோஸ்டாட் தரவுத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |