திருப்பத்தூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் உத்தரவின்படி,பணி வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் வாணியம்பாடி உழவர் சந்தையில் பணிபுரியும் காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக இடைவெளியுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அப்போது வேளாண்மைத்துறை அதிகாரி முருகதாஸ், டாக்டர் வெங்கடேசன், சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் அவருடன் இருந்தனர்.