பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீரியலில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பவர்ஸ்டார் என்ற பெயரைக் கேட்டாலே தெரியாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு மிகவும் பிரபலமானவர். இவர் தனது திரைப் பயணத்தை தொடங்கும் போது சின்ன சின்ன ரோல்களில் நடிகர் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதை தொடர்ந்து தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வரும் பவர்ஸ்டார் தற்போது சீரியலில் நடிக்க களமிறங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் அவர் தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள “ஜோதி” சீரியலில் இணைந்துள்ளார் என்று தெரியவந்தது. ஆகையால் சீரியலில் பவர் ஸ்டாரின் நடிப்பைக் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்