Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அந்த ரசாயனத்தை குடித்த பிறகு… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சபாபதி பகுதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 33 வயதுடைய கனி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கனி அம்மாள் தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மூர்த்தி தனது மனைவி மயங்கிய நிலையில் கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி கனி அம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கனி அம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கனி அம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |