அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் முதலில் விக்ரம் தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ‘விக்ரம்’. இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகர் விக்ரம் தற்போது சியான்60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் விக்ரம் கூட்டணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ராவணன் திரைப்படத்திற்கு முன்பே இந்தக் கூட்டணியில் வேறு ஒரு படம் உருவாகி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் முதலில் நடிக்க தேர்வானது விக்ரம் தான் என்று கூறப்படுகிறது.ஆனால் அப்போது விக்ரம் வேறொரு படத்திற்காக மீசை, தாடியெல்லாம் வளர்த்ததால் பம்பாய் திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.