Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 4 மாதம் தான் ஆச்சு…. புது மாப்பிள்ளையின் முடிவு…. விசாரணையில் காவல்துறை….!!

திருமணமான நான்கு மாதங்களில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள இடையப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அபிநய பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாழ்க்கையை வெறுத்த வினோத்குமார் மன உளைச்சலில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |