Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சந்தேகமா இருக்கு… மடக்கி பிடித்த காவல்துறையினர்… கைது செய்யப்பட்ட இருவர்…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் சந்தேகப்பட்டு நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் உலகப்பாடி கிராமத்தில் வசிக்கும் முருகேசன் மற்றும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து முருகேசனும், சரவணனும் சட்ட விரோதமாக சாராயம் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வந்த முருகேசன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த 50 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |