Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார் – ஜூன்-11 வரை காவல் விதித்து உத்தரவு…!!!

சென்னையில் பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அடுத்தடுத்து வேறு பள்ளி ஆசிரியர்கள் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு ஜூன் 11 வரை காவல் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Categories

Tech |