Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு வருஷம் கூட ஆகல… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் உடல் கருகி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளையனார் குப்பம் ஏரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 9 மாதங்கள் முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் இரவு நேரத்தில் மணிகண்டன் மட்டும் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத  விதமாக திடீரென வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிய ஆரமித்துள்ளது.

இதனால் வீட்டிற்குள் இருந்த மணிகண்டன் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |