மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அரசு முறைப்பயணமாக 5 நாட்கள் அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கொரோனா நிவாரண பணிகள், ஐநாபாதுகாப்பு கவுன்சில் விவகாரம், பருவ நிலை மாறுபாடு விவகாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் தீவிரமாக கலந்து ஆலோசித்துள்ளனர்.
மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கன் இந்த சந்திப்பிற்கு பிறகு கூறுகையில், “ நமது காலத்தில் உள்ள பல்வேறு முக்கிய விவகாரங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயலாற்றுகின்றன. அதோடு இந்த கொரோனா காலகட்டத்தில் தடுப்பு நடவடிக்கையில் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.