Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புல் அறுக்க சென்ற பெண்…. தனியார் தோட்டத்தில் நேர்ந்த சம்பவம்…. கண்ணீரில் குடும்பம்….!!

பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் துரைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இந்திரா அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்ற போது பாம்பு ஒன்று கடித்துவிட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோழவந்தான் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |