பிரதமர் நரேந்திர மோடி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று “மன் கீ பாத்” என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாடுவது வழக்கம். அதன்படி இந்த வாரம் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சி உரையாடலில், பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் புயல்களை மாநில அரசுகள் மிக தைரியமாக எதிர் கொண்டன என்றும், நம்முடைய படைகள் தைரியமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள் எனவும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.