Categories
மாநில செய்திகள்

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி…. பாலியல் சீண்டல் – பரபரப்பு…!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்ததையடுத்து இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்ததையடுத்தும் ஆசிரியர் மீது, அந்த பள்ளியை சேர்ந்த  மாணவிகள் தொடர்ந்து புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் தற்போது பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்கள் தங்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரச் சொல்லி பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் கூறியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |