பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி பகுதியில் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துறை பணிகளில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஆச்சாம்பட்டி பகுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் வினோத் இடையன்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் மன உளைச்சலில் இருந்த வினோத் தான் தங்கியிருந்த வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை கண்ட சக தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.