தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் 64 முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றிய குற்றத்திற்காக காவல்துறையினர் 2020 இருசக்கர வாகனங்கள், 21 ஆட்டோக்கள் மற்றும் 34 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.