Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது எவ்ளோ நாளா நடக்குது… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அதவத்தூர் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷிற்கு சோமரசம்பேட்டை அருகில் இருக்கும் கொய்யா தோப்பு பாலம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு இருவர் இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரி இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து சோமரசம் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக மதன், சக்திவேல் என்ற இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |