கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடிய 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம், காபி ஹவுஸ் ரவுண்டானா, சேரிங் கிராஸ் சந்திப்பு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஊட்டி காபி ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 10 பேர் ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தாயம் விளையாடிய 10 பேர் மீதும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக வழக்கு பதிந்துள்ளனர்.