Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… மொத்தமாக சிக்கிய 150 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 150 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை மொத்தம் 98 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வழிப்பறி, திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 29 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் ஒருவர் மீதும், போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்த குற்றத்திற்காக 12 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இவ்வாறாக பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக மொத்தம் 150 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |