கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை நண்பர்கள் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கேரம் விளையாட்டு போட்டி தொடர்பாக பிரகாஷிற்க்கும், மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் திலீப்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து திலீப் குமார் மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ், ராஜேஷ் போன்றோர் இணைந்து பிரகாஷிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பின் படுகாயமடைந்த பிரகாஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராயப்பேட்டை காவல்துறையினர் பிரகாஷை கத்தியால் குத்திய மூன்று நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.