Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற மூதாட்டி… சட்டென ஏற்பட்ட விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் ரயில்வே தண்டவாளத்தை 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு வேகமாக வந்த சரக்கு ரயில் மூதாட்டி மீது மோதி விட்டது. இதனால் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டியின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |