கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பஜார் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பையில் 1 1/2 கிலோ கஞ்சா இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பின் அந்த வடமாநில வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களிடம் விற்பனைக்காக கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரதீஷ்குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.