Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முன்கள பணியாளர்களுக்கு…. வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உணவு… சிறப்பான முயற்சி…!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றோருக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கபசுர குடிநீர், சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மதரஸா பாபு என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து பேருந்து நிலையம், பசுபதிபாளையம், சிண்டிகேட் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |