கொரோனா சிகிச்சைக்காக 25 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனிப்பிரிவை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் தாலுகா அளவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் கீழ் வேலூர் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் அரசு அதிகாரிகளிடம் அனைத்து வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்பாக தெளிவாக கேட்டறிந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், நாகை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கௌதமன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.