பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், அவரின் காதலியை ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 32 வயதுடைய கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் லண்டனில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில், பிரதமர் அவரின் காதலியை ரகசியமாக திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது. இத்திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான சிலரே கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.