அரசு மருத்துவமனையில் பாம்பு நுழந்ததால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அடித்து பிடித்து ஓடியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு நுழைந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சத்தில் அடித்து பிடித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நல்ல பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனைத்து இடங்களிலும் முட்புதர்கள் கிடப்பதனால் அடிக்கடி பாம்பு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.