முதல்வர் மு.க ஸ்டாலின் தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று நேரடி ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு கோவையில் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், தளர்வுற்ற முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
முழு ஊரடங்கில் மக்கள் பாதிக்காத வகையில் நடமாடும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறாமல் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.