நெல்லையில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த நபர்களிடமிருந்து 34 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் முழு ஊரடங்கையும் அமலுக்கு வந்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் அதிரடியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் ஊரடங்கு விதியை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார். அதன்படி ஒரே நாளில் விதியை மீறி வெளியே சுற்றித்திரிந்த 28 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 34 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.