சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘வாழ்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், டாக்டர் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் . இவர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கனா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிகர் ரியோ நடிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்திருந்தார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அருவி பட இயக்குனர் அருண் பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. கடந்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது . விரைவில் வாழ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.