Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் தேக்கி வைச்சிருக்கோம்… எதுவும் செய்ய முடியல… ஊரடங்கினால் ஏற்பட்ட விளைவு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் 5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல், மேச்சேரி, ஆத்தூர் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிகள் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 3 வாரங்களாக மஞ்சள் ஏலம் நடைபெறவில்லை. இதனால் சுமார் 2 டன் அளவில் மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளதால் சுமார் 5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |