Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: வங்கியில் புதிய விதி உடனடி அமல் – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள கிளை தவிர்த்து மற்ற கிளைகளில் பணம் எடுக்கும்போது இனி ஒரு நாளைக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என அறிவித்துள்ளது. காசோலை மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், 2021 செப்டம்பர் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |