நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல முக்கிய இடங்களும் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் உள்ள அனைத்து தளங்களையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களையும் ஜூன் 15ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது.