Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய 14 பேர்… பிடித்து பரிசோதனை செய்த அதிகாரிகள்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 14 பேரை பிடித்து அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி 10 மோட்டார் சைக்கிள்களில் 3 பெண்கள் மற்றும் 11 வாலிபர்கள் அத்தியாவசிய தேவையின்றி கூட்டமாக வந்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.

அதன்பின் வனப்பகுதிக்குள் ஓடிய 14 பேரையும் அதிகாரிகள் விரட்டி பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து 14 பேரையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின் அதிகாரிகள் கொடைக்கானலில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் அந்த 11 வாலிபர்களையும் அடைத்து விட்டனர். மேலும் அந்த 3 பெண்களையும் அவரவர் வீட்டிற்கு அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |