இணை போலீஸ் கமிஷனர் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அரசு நெறிப்படுத்திய கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் அரசு நெறிபடுத்திய விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக இணை போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கமிஷனர் முக கவசம் அணியாமல் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு முக கவசத்தை இலவசமாக வழங்கியதோடு, இனிமேல் இவ்வாறு வெளியே வரக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.