Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ் – கேரள அரசு அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று கூறும் நாடுகளில் பணிபுரிவோர், கல்வி கற்போர் ஆகியோருக்காக பாஸ்போர்ட்டுடன் தடுப்பூசி பெயர் ஆகியவை அடங்கிய சான்றிதழ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் கேரள மக்கள் https://covid19.kerala.gov.in/vaccine/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |