வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என நரிக்குறவர் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது.
இதனால் கோவில்களில் ஊசி பாசி மணி என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வாழ்ந்து வரும் நரிக்குறவர்கள் விற்பனை செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.