சிறப்பாக செயல்பட்டு டிரைவரின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து மினி லாரி ஒன்று கேரளா நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் இந்த மினி லாரி கில் நாடுகாணி அருகில் இரண்டாவது வளைவு சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விட்டது. தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் மினி லாரி டிரைவர் அபிலாஷ் என்பவர் உயிருக்கு போராடும் நிலையில் காப்பாற்ற ஆள் இல்லாமல் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நீலகிரி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மரைக்காயர் போன்றோர் உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிலாசை பார்த்துள்ளனர். இதனையடுத்து அபிலாஷின் சுவாசம் குறைவாக இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் அவரது மார்பில் கைகளால் அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தனர்.
இதனால் டிரைவர் அபிலாஷ் சிறிது நேரத்திலேயே சுயநினைவிற்கு திரும்பி விட்டார். அதன் பிறகு அபிலாசை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு காவல்துறையினர் அபிலாஷின் உயிரை காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.