Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் ….தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸ் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த நபரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் பசுபதி.  பூண்டி சந்திரசேகர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு , மத்திய அரசின் திட்டமான ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் குடிநீர் குழாய் இணைக்கும் பணியை மேற்கொள்ள நேற்று முன்தினம் சென்றுள்ளார் . அப்போது அதே நகரை சேர்ந்த 41 வயதான தண்டபாணி என்ற நபர், தன் வீட்டில் அருகில் குடிநீர் குழாய் இணைக்கக் கூடாது என்று அந்த அதிகாரியிடம் தகராறில்  ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக சென்றிருந்த ஆட்களையும் ,அடித்து விரட்டி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

அங்கு குடிநீர் இணைப்பு குழாய்காக  போடப்பட்டிருந்த ,ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள குழாய்களை எரித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தண்டபாணி தன் வீட்டின்  எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து விட்டனர். இதுதொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசில்  வட்டார வளர்ச்சி அலுவலரான பசுபதி மற்றும் தகராறில் ஈடுபட்ட தண்டபாணி ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் தகராறில் ஈடுபட்ட தண்டபாணியை  கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 2  பேரையும் போலீசார் தேடி வருகின்றன.

Categories

Tech |