ராஜஸ்தான் மாநிலத்தில் கணவனை இழந்து வாடும் பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்ய அவரின் மனைவியை உறுதுணையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் ஒரு பெண் கணவனை இழந்து தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனை கண்காணித்த கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு அவரின் மனைவி உறுதுணையாக இருந்து தான் பெரும் அதிர்ச்சி. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் அருகில் உள்ள கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் கணவனை இழந்து வாழும் தன்னை கான்ஸ்டபிள் மணிரத்தினம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு உறுதுணையாக அவரது மனைவி இருந்ததாகவும் அந்த வீடியோ பதிவில் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த வீடியோவை வைத்து கான்ஸ்டபிளை பணி நீக்கம் செய்தது மட்டும் இல்லாமல், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும், அவரது மனைவியையும் விசாரணை செய்து வருகின்றனர்.