Categories
தேசிய செய்திகள்

“எனது மகன் மருத்துவமனை அலட்சியத்தால் இறந்தான்”… வழக்குப் பதிவு செய்ய போராடும் பாஜக எம்எல்ஏ…!!!

மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாகக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு உத்திரப்பிரதேச மாநிலம் பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் போராடி வருகிறார்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சண்டிலா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் என்பவரின் மகன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் கூறுகையில்: “எனது மகன் 26-ஆம் தேதி காலையில் நன்றாக பேசினான். சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தான். அதுமட்டுமில்லாமல் அவன் ஆக்சிஜன் அளவு 94 ஆக இருந்தது. திடீரென்று மாலை அவனின் ஆக்சிஜன் அளவு குறைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வெளியிலிருந்து நாங்களும் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்தோம். ஆனால் மருத்துவமனை எனது மகன் இறந்ததாக தெரிவித்தனர்” என்று கூறினார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவமனையின் அலட்சியத்தின் காரணமாக தான் எனது மகன் இறந்து விட்டதாக கூறி எப்ஐஆர் பதிவு செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் உத்தரப்பிரதேச காவல்துறையினர் மருத்துவமனைக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |