நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு விகிதத்தை தொடர்ந்து தளர்வுகளும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்ட வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் ஜூன் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் 50% பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், பயணிகள் வரத்து குறைந்து இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு விமான கட்டணம் 13 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories