தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் மக்களின் அத்தியவாசிய தேவைக்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் உத்தரவு அமல் ஆகியுள்ளது. வாடிக்கையாளர்கள் கூறும் அழகிய பொருட்களை அவர்களது வீடுகளுக்கே சென்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.