தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கிகளில் வேலை நேரத்தையும் ஜூன் 6ஆம் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி கிளைகளுக்கு வழக்கமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரம். ஆனால் ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம் போல மாலை 5 மணி வரை செயல்படும்.
அனைத்து கிளைகளிலும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மாற்று முறையில் பணிபுரிவார்கள். ரொக்க பரிவர்த்தனை, என். இ.எப்.டி, ஆர்டிஜிஎஸ் வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வர்த்தகம் மற்றும் காசோலை பரிவர்த்தனை சேவைகள் வழங்க வேண்டும். ஏடிஎம் மற்றும் ரொக்க பணம் செலுத்தும் இயந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.